×

திருவள்ளுவர் ஆக நடிக்கும் ஹர்பஜன் சிங்

சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அடுத்து தமிழ் வெப் சீரிஸில் திருவள்ளுவர் வேடம் ஏற்று நடிக்கிறார். இதற்காக திருவள்ளுவர் வேடம் அணிந்து ஹர்பஜனுக்கு மேக்அப் டெஸ்ட் எடுத்தபோது வேடம் கனகச்சிதமாக இருந்தது. டியூட் விக்கி இயக்குகிறார். இத்தொடர் பிப்ரவரி 2ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது.

இதையடுத்து பள்ளி மாணவர்களின் நட்பு, தேவை, பிரச்னைகளை மையமாக வைத்து புதிய திரைப்படம் உருவாகிறது. முருகானந்தம் தயாரிப்பில் ராஜ்மோகன் இயக்குகிறார். இவர் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தை இயக்கியவர். அயாசு, மைக் செட் ஸ்ரீராம் ஹீரோக்களாக நடிக்கின்றனர்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த டாக்டர் சேது நடிப்பில் கார்த்தி வேணுகோபால் இயக்கும் புதிய வெப் தொடர், விருது, திறமை விழா உள்ளிட்ட 7 படைப்புகளையும் ஆர்.ஜே.விக்னேஷ், அரவிந்த்தின் பிளாக் ஷீப் நிறுவனம் உருவாக்குகிறது. இதற்கான தொடக்க நிகழ்ச்சியில் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குனர்கள் சேரன், விஜய்சந்தர், நாஞ்சில் சம்பத், நடிகர் சியோ உள்ளிட்ட பலர்பங்கேற்றனர்.

Tags : Harbhajan Singh ,Thiruvalluvar ,
× RELATED குமரியில் வள்ளுவர் சிலை- விவேகானந்தர்...