×

கூலி ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கூலி’. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் நாகர்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்ட பான் இந்தியா நட்சத்திரங்கள் நடிப்பில் பிளாக் பஸ்டர் ஹிட் ஆகியிருக்கும். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ‘கூலி’ படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

தற்போதுவரை உலகளவில் ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்து, ரஜினிகாந்தின் கரியரில் மூன்றாவது ரூ.500+ கோடி படமாக இது அமைந்துள்ளது. இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீசை படக்குழு அறிவித்துள்ளது. கூலி படம் வரும் 11 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

Tags : OTD ,Rajinikanth ,Lokesh Kanakaraj ,Sun Pictures ,ANIRUT ,NAGARJUNA ,AMIR KHAN ,SATYARAJ ,SAUBIN SAHIR ,SRUTIHASAN ,UBENDRA ,Kariyar ,
× RELATED டியர் ரதி பிரச்னையில் சிக்கும் டேட்டிங் ஜோடி