×

ஒன்றிய அரசின் அனைத்து கொள்கைகளும் சாமானிய மக்களின் நலனையே மையமாக கொண்டுள்ளன: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

ஆந்திரா: ஒன்றிய அரசின் அனைத்து கொள்கைகளும் சாமானிய மக்களின் நலனையே மையமாக கொண்டுள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஆளுநர் பிஸ்வ பூஷன் ஹரிசந்தன் மற்றும் ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் முன்னிலையில் விசாகப்பட்டினத்தில் வளர்ச்சித் திட்டங்களின் மாதிரிகளை பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்தார். பின்னர் பேசிய பிரதமர், இன்று தொடங்கப்படும் பொருளாதார வழித்தடம், ஆந்திரப் பிரதேசத்தில் வர்த்தகம் மற்றும் உற்பத்தியை அதிகரிக்க பலதரப்பட்ட இணைப்பை மேம்படுத்தும். இந்த புதிய உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களால், ஆந்திரப் பிரதேசத்தின் கடலோரப் பகுதிகள் இப்போது விரைவான வளர்ச்சியடையும். உலகம் நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கும் போது, இந்தியா பல துறைகளில் புதிய மைல்கற்களை அடைந்து வரலாற்றை படைத்தது. நமது வளர்ச்சியை உலகம் பார்க்கிறது. அரசின் அனைத்துக் கொள்கைகளும் சாமானிய மக்களின் நலனையே மையமாகக் கொண்டுள்ளன. நாடு மிகப்பெரிய பொருளாதாரத்துடன் தொடர்புடைய, எல்லையற்ற சாத்தியக்கூறுகளை உணர பெரிய அளவில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. துறைமுகம் சார்ந்த வளர்ச்சி மூலம் இந்தியாவின் பொருளாதாரத்தில் வாய்ப்புகளை பெரிதும் மேம்படுத்தியுள்ளோம். உலகம் முழுவதும் முதலீட்டாளர்களின் விருப்பமான முதலீட்டு இடமாக இந்தியா வேகமாக மாறி வருகிறது. இந்தியா விரைவான வளர்ச்சி, புதிய யோசனைகள் மற்றும் தீர்வுகள் மைய புள்ளியாக மாறியுள்ளது என பிரதமர் குறிப்பிட்டார்….

The post ஒன்றிய அரசின் அனைத்து கொள்கைகளும் சாமானிய மக்களின் நலனையே மையமாக கொண்டுள்ளன: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Union Government ,PM Narendra Modi ,Narendra Modi ,
× RELATED வீர் சக்ரா விருது பெற்ற மாஜி கடற்படை...