×

புற்றுநோயை எதிர்த்துப் போராடும் குழந்தைகளுக்கான நிகழ்வில் ஒரு நாளின் நினைவுகளை உருவாக்கிய Zebronics!

சென்னை: தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் குழந்தைகளுக்கான நிகழ்வில் Zebronics ஒரு நாளின் நினைவுகளை உருவாக்கியது. இந்தியாவின் ஐடி புறப்பொருட்கள் மற்றும் நுகர்வோர் மின்னணுவியல்களை முன்னணி பிராண்டாக கொண்ட ஒரு பொறுப்பான, பெருநிறுவன பிரஜையான, Zebronics, சென்னையில் உள்ள NGO நிறுவனமான மிர்ட்டலுடன் இணைந்து, புற்றுநோயுடன் போராடிக் கொண்டிருக்கும் 20 குழந்தைகளுக்கு, அவர்கள் குடும்பத்தினருடன் சென்னையில் தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தையொட்டி, ஒரு நாள் முகாம் ஏற்பாடு செய்திருந்தது. Zebronics இணை நிறுவனர் மற்றும் இயக்குநர் ராஜேஷ் தோஷி முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அவர் அனைத்து குழந்தைகளுடனும் அவர்களது பெற்றோர்களுடனும் தொடர்பு கொண்டு, அவர்களின் அடிமட்ட கவலைகளைப் புரிந்து கொள்ள, அவர்களில் ஒவ்வொருவரிலும் கவனம் செலுத்தினார். தங்களுக்கு கிடைத்த பொருட்களால் குழந்தைகள் மிகவும் புத்துணர்ச்சி பெற்று மகிழ்ச்சியடைந்தனர். அதைத் தொடர்ந்து இனிமையான மதிய உணவு வழங்கப்பட்டது. அதற்குப் பின்னர், அவர்கள் அனைவரும் ஆர்கேட் விளையாட்டுகளை விளையாட அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களின் கண்கள் அதிக பிரகாசமடைந்து, அவர்களின் புன்னகைகள் இன்னும் அதிகமாக பிரகாசித்தன. அந்த நாளின் முடிவில், அந்த அழகான உள்ளங்கள் பாடி நடனமாடி, ஒரு சாதாரண குழந்தையைப் போல மகிழ்ச்சியாக இருந்தன. பின்னர் அனைவரும் பாதுகாப்பாக அவரவர் இடத்தில் இறக்கி விடப்பட்டனர். அந்த நாளை நினைவில் கொள்ளும் வகையில் ராஜேஷ் தோஷி கூறினார்: “இன்று ஒரு ஆசீர்வாதமான நாள். Zebronics எப்போதும் அதன் CSR பிரிவு மூலம், இது போன்ற ஆசீர்வாதமான வாய்ப்புகளைப் பெறுகிறது. மேலும் அடிக்கடி NGO-களுடன் ஒன்று சேர்ந்து, செப்-ஹெல்த் முயற்சியில் இந்த நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து மேற்கொள்கிறோம். இந்த குழந்தைகள், ஒரு பயங்கரமான நோயுடன் போராடுவதால், பெரும்பாலும் சரியான கல்வியைத் தொடர முடிவதில்லையென்றாலும், அவர்களின் வயதுக் குழந்தைகளிடம் இருக்கும் அதே அப்பாவித்தனமும் புத்துணர்வும் இன்னும் அவர்களிடம் உள்ளது. அவர்களின் பெற்றோருடன் பேசும்போது, அவர்கள் எதிர்கொள்ளும் தடைகளுக்கு பெரும்பாலும் தகவல் அறிதல் மற்றும் அறிவு இல்லாமையே காரணம் என்பதை உணர்ந்தேன். அதனால் கல்வி கற்பது இன்னும் மிகப்பெரிய தடையாக உள்ளது. இவை பெரும்பாலும் அவர்களை வழிதவறச் செய்கின்றன. நாங்கள் தகவல் தரும் அம்சத்தில் நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல், அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கவும் திறமைகளை வழங்குவதற்கும் சரியான நடவடிக்கைகளை எடுக்கவும் மற்றும் எந்த அம்சத்திலும் சவால்களை சமாளிக்கவும் அவர்களுக்கு உதவுவோம். இது சம்பந்தமாக, Zebronics அதன் CSR திட்டங்களை மேம்படுத்தி முன்னேற்றம் அடையப் போகிறது.” என கூறினார்….

The post புற்றுநோயை எதிர்த்துப் போராடும் குழந்தைகளுக்கான நிகழ்வில் ஒரு நாளின் நினைவுகளை உருவாக்கிய Zebronics! appeared first on Dinakaran.

Tags : Zebronics ,Chennai ,National Cancer Awareness Day ,India ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...