×

சென்னை உள்வட்ட சாலைகளில் மழைநீர் வடிகால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுரை

சென்னை: சென்னை உள்வட்டச் சாலைகளில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணியை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார். சென்னை உள்வட்டச் சாலைகளில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகளை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும்  சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார். அப்போது சென்னை கத்திபாரா சந்திப்பில் இருந்து கோயம்பேடு வழியாக மணலி செல்லும் உள்வட்டச் சாலையில், ஈக்காட்டுதாங்கல் முதல் அடையாறு வரை மழைநீர் வடியும் பொருட்டு.530 மீட்டர் நீளத்துக்கு ரூ.4 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் பணிகள், கே.கே.நகர் மற்றும் அசோக் நகர் பகுதியில், அண்ணா பிரதானச் சாலை சந்திப்பில் இருந்து அடையாறு ஆறு வரை சுமார் 800 மீட்டர் நீளத்திற்கு ரூ.5.50 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் பணிகள், அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகில், விருகம்பாக்கம் வாய்க்காலில் உள்ள பாலத்தின் அடியில், தேங்கியிருக்கும் மண் மற்றும் கழிவுகளை நெடுஞ்சாலைத்துறை மூலம் நவீன இயந்திரங்களைக் கொண்டு அடைப்புகள் அகற்றும் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது, இந்த பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தினார். மேலும், வடபழனி பகுதியில், பெரியார் பாதை சந்திப்பில், தேங்கும் மழைநீரால் போக்குவரத்து பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, நவீன முறையில் முன்வார்ப்பு செய்து கல்வெட்டு பொருத்தும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, தலைமை பொறியாளர் சந்திரசேகர், கண்காணிப்பு பொறியாளர் செந்தில், கோட்ட பொறியாளர் ரவி மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்….

The post சென்னை உள்வட்ட சாலைகளில் மழைநீர் வடிகால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister AV Velu ,Minister ,A.V. Velu ,AV Velu ,Dinakaran ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி