×

இந்தாண்டு 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மின்துறை முடிவு: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

சென்னை: இந்தாண்டு 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மின்துறை முடிவு செய்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை தொடர்பாக மின்வாரிய அலுவலகத்தில் தலைமை மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்வதில் தீவிரமாக இருக்கிறோம். மழையால் பாதிக்கப்படும் மின் சாதனங்களை உடனடியாக மாற்ற, மாற்று உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டைவிட இந்தாண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பருவமழை காலத்தில் சீரான மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் மழை பாதிப்பை எதிர்கொள்ள மின் வாரியத்தால் தலா 15 பேர் அடங்கிய 760 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வழக்கமான மின்சார பணிகளோடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக கூடுதல் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மின்சார பணியாளர்கள் மட்டுமின்றி, கூடுதலாக 11 ஆயிரம் பேர் மழை பாதிப்பு நடவடிக்கைக்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர். மின்னகத்தில் புகார் தெரிவிக்க கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளதால் உடனுக்குடன் தீர்வு காணப்படுகிறது. மழை நேரங்களில் மின்வாரிய ஊழியர்கள் பாதுகாப்பான முறையில் பணியாற்றி வருகின்றனர். இந்தாண்டு 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மின்துறை முடிவு செய்துள்ளது இவ்வாறு கூறினார். …

The post இந்தாண்டு 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மின்துறை முடிவு: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி appeared first on Dinakaran.

Tags : India ,Minister ,Senthil Balaji ,Chennai ,Ind ,
× RELATED பண மோசடி வழக்கில் ஜாமின் கோரிய...