×

ராணி முகர்ஜிக்கு சூர்யா பாராட்டு

இந்திய திரையுலகின் 71வது தேசிய விருதுகளில் விருதுபெற்ற கலைஞர்களை வாழ்த்திய சூர்யா, ராணி முகர்ஜியை மனம் திறந்து பாராட்டியுள்ளார். தமிழ்நாட்டில் இருந்து விருது பெற்றவர்களை குறிப்பிட்டுள்ள அவர், ‘71வது தேசிய விருதுகளில் சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் ஆகிய பிரிவுகளில் கவுரவிக்கப்பட்டுள்ள ‘பார்க்கிங்’ படக்குழுவினருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். எம்.எஸ்.பாஸ்கர், இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன், தயாரிப்பாளர்கள் கே.எஸ்.சினிஷ், சுதன் சுந்தரம் ஆகியோருக்கு வாழ்த்துகள்.

என்மீது அதிக அன்பு கொண்ட ‘சூரரைப்போற்று’ ஜி.வி.பிரகாஷ் குமார், தனுஷ் நடித்த ‘வாத்தி’ என்ற படத்துக்காக, சிறந்த பாடல்களுக்கான விருது வென்றதற்கு வாழ்த்துகள். தேசிய விருதுகள்-2023ல் சிறந்த நடிகருக்கான விருது வென்ற ‘ஜவான்’ ஷாருக்கான், ‘12த் பெயில்’ விக்ராந்த் மாஸ்ஸிக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். எனது மிகப்பெரிய விருப்பமான ‘மிஸஸ் சட்டர்ஜி’ என்ற படத்தில் ரணி முகர்ஜியின் சிறந்த நடிப்புக்கு பாராட்டுகள். ‘உள்ளொழுக்கு’ என்ற படத்துக்காக விருது வென்ற எங்கள் ஊர்வசி மேடத்துக்கு அன்பான வாழ்த்துகள்’ என்று பதிவிட்டுள்ளார்.

Tags : Surya ,Rani Mukherjee ,71st National Awards ,Indian Film Industry ,Tamil Nadu ,M. S. Baskar ,Ramkumar Balakrishnan ,K. S. ,Sinish ,Sudhan Sundaram ,Surarapottu ,G. V. Prakash Kumar ,
× RELATED பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேனா..? ரகசியம்...