×

திரிஷாவை மணக்க சார்மி வெயிட்டிங்

மேற்கத்திய கலாச்சாரம் திரையுலகை பிடித்து ஆட்டுகிறது. தொடக்க படங்களில் முத்தம் கொடுத்து நடிக்கவே தயங்கிய நட்சத்திரங்கள் தற்போது பொது இடத்திலேயே லிப் டு லிப் முத்தம் தந்து அதை நெட்டிலும் பகிர்கின்றனர். டேட்டிங், சாட்டிங் என்றும் கலாச்சாராம் வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகை சார்மி மற்றொரு புது கலாச்சாரத்தை புகுத்துகிறார்.

சார்மியை ஞாபகம் இருக்கிறதா? காதல் அழிவதில்லை, ஆஹா எத்தனை அழகு படங்களில் நடித்தவர். தற்போது தெலுங்கு படங்களில் வருடத்துக்கு ஒரு படம் நடிக்கிறார். சார்மியும், த்ரிஷாவும் டிகிரி தோஸ்த்துக்கள். அன்பை வெளிப்படுத்த இருவரும் கன்னத்தில் அழுத்தமான முத்தம் பகிர்ந்துகொள்வார்கள்.

சமீபத்தில் திரிஷா பிறந்ததினத்தன்று சார்மி பதிவிட்ட ஒரு மெசேஜ் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ‘அன்பே திரிஷா, இன்று மட்டுமல்ல எப்போதும் உன் மீது எனக்கு காதல். உன்னுடைய சம்மதத்துக்காக நான் இன்னும் காத்துக்கொண்டிருக்கிறேன். நாம் இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம். இப்போதுதான் சட்டப்படியும் அதற்கு ஒப்புதல் கிடைத்திருக்கிறது’ என குறிப்பிட்டிருக்கிறார்.

Tags : Thrissa ,
× RELATED 5 முருக பக்தர்களின் கதை படமாகிறது