×

சென்னையில் மாற்றுதிறனாளிகள் மாநாடு

சென்னை: தமிழ்நாடு மாற்று திறனாளிகள் முன்னேற்றச் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னை தி.நகரில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சங்க மாநிலத் தலைவர் ரெ.தங்கம் தலைமை தாங்கினார்.  பொதுச்செயலாளர் எஸ்.சரவணகுமார், பொருளாளர் எஸ்.பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்குழுவில் 2வது முறையாக திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக மாநில நிர்வாகிகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 10 ஆண்டு காலம் செயல்படாத தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நலவாரியத்தை மறு சீரமைப்பு செய்தும், வாரியத்தை செயல்பட செய்த முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது, நகர பேருந்துகளில் துணையாருடன் இலவசமாக சென்றுவர அரசாணை பிறப்பித்து செயலாக்கம் செய்தது. மாற்றுத் திறனாளிகளுக்கு தள்ளுவண்டி, பெட்டிக்கடை வைத்திட அனுமதி தந்த முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் அடுத்த மாதம் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களை அழைப்பது என முடிவு செய்யப்பட்டது. …

The post சென்னையில் மாற்றுதிறனாளிகள் மாநாடு appeared first on Dinakaran.

Tags : Transfers Conference ,Chennai ,Tamil ,Nadu ,Alternative Skillers Advancement Union General Commission Meeting ,
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்