×

பருவமழை தொடங்க உள்ள நிலையில் வெள்ள தடுப்பு பணியை நள்ளிரவில் அமைச்சர் எ.வ.வேலு திடீர் ஆய்வு

பெரம்பூர்: பருவமழை தொடங்க உள்ள நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் வெள்ளத் தடுப்பு பணிகளை நள்ளிரவில் அமைச்சர் ஏ.வ.வேலு திடீர் ஆய்வு செய்தார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில், தமிழ்நாடு நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடங்களில் நடைபெறக்கூடிய பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென ஆய்வு செய்தார். குறிப்பாக, கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள டெம்பிள் ஸ்கூல், வீனஸ் நகர் பகுதி, ரெட்டேரி சிக்னல், 200 அடி ரிங் ரோடு மற்றும் பவானி நகர் பகுதிகளில் நடந்து வரும் பணிகளை அமைச்சர் வேலு பார்வையிட்டார். இதையடுத்து, சென்னை துறைமுகம் தொகுதிக்குட்பட்ட வால்டாக்ஸ் சாலை, சவுகார்பேட்டை பகுதி, யானை கவுனி, பார்க் டவுன் பகுதிகளில் பல்வேறு இடங்களில் நடந்து வரும் பணிகளையும் அமைச்சர் ஆய்வு செய்தார். வேப்பேரி பகுதியில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு எதிரே உள்ள பகுதியில் நடைபெறும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.  அப்போது அமைச்சர், பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். குறிப்பிட்ட இடங்களில் நடந்து வரும் பணிகளை வரும் 20ம் தேதிக்குள் முடிக்கவேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டார்….

The post பருவமழை தொடங்க உள்ள நிலையில் வெள்ள தடுப்பு பணியை நள்ளிரவில் அமைச்சர் எ.வ.வேலு திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Minister ,A.V. Velu ,Perambur ,Chennai ,AV ,Velu ,Dinakaran ,
× RELATED பெரம்பூர் ரமணா நகர் பகுதியில் மெட்ரோ...