×

நடிகைகள் கொடுத்த யோகாசன போஸ்

சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினர் யோகாசனம் செய்து, தங்களின் வீடியோ மற்றும் போட்டோக்களை சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டனர். நடிகைகள் கீர்த்தி சுரேஷ், ராய் லட்சுமி, பிரணீதா சுபாஷ் ஆகியோர் யோகாசனம் செய்து போஸ் கொடுத்த வீடியோ மற்றும் போட்டோக்கள் வைரலாகி வருகின்றன. கீர்த்தி சுரேஷ், ராய் லட்சுமி ஆகியோர் அடிக்கடி கோவா அல்லது துபாய், மாலத்தீவுக்கு சென்று தங்கள் விடுமுறையை கொண்டாடி மகிழ்வது வழக்கம்.

அப்போது கிளாமர் உடையில் தோன்றும் போட்டோஷூட் செய்து, அதை தங்கள் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு பரபரப்பு ஏற்படுத்துவார்கள். தற்போது யோகா தினத்தில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள போட்டோவில், ரப்பர் போல் உடலை வளைத்து வித்தியாசமான யோகா போஸ்களை கொடுத்துள்ளார். ராய் லட்சுமி, தலைகீழாக தொங்கியபடி யோகா போஸ் கொடுத்து அசத்தியுள்ளார். பிரணீதா சுபாஷ் வெளியிட்ட பதிவில், சூர்ய நமஸ்காரம் செய்தது மட்டுமின்றி தனது கை, கால்களை மடக்கி விசித்திரமான யோகா போஸ்களை கொடுத்துள்ளார். அதை பார்த்த நெட்டிசன்கள் வியந்து, ‘இப்படியெல்லாமா யோகாசனங்கள் இருக்கின்றன?’ என்று கேட்டு வருகின்றனர்.

Tags : International Yoga Day ,Keerthy Suresh ,Raai Lakshmi ,Praneetha Subhash… ,
× RELATED கவர்ச்சி உடை விமர்சனம்: நடிகை நிதி அகர்வால் பதிலடி