
தமிழ் படவுலகில் கடந்த சில வருடங்களாக புது ஹீரோயின்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும் மாடலிங் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்து ஜெயித்த ஹீரோயின்கள் நிறையபேர் இருக்கின்றனர். தற்போது அந்த வரிசையில் பிரபல மாடல் தீவ்ரா ஹரன் தமிழ் படத்தில் அறிமுகமாகிறார். சிவகார்த்திகேயன் நடித்த ‘மான் கராத்தே’, உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘கெத்து’ ஆகிய படங்களை திருக்குமரன் என்ற பெயரில் எழுதி இயக்கியிருந்த கிரிஷ் திருக்குமரன், தற்போது அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ள ‘ரெட்ட தல’ என்ற படத்தை எழுதி இயக்கியுள்ளார்.
சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். நாளை (25ம் தேதி) படம் திரைக்கு வருகிறது. இதில் சித்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன் ஆகியோருடன் 3வது ஹீரோயினாக தீவ்ரா ஹரன் நடித்துள்ளார். மேலும் சில தமிழ் படங்களில் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

