×

ஜின் விமர் சனம்

மலேசியாவுக்கு இசை நிகழ்ச்சி நடத்த சென்ற முகேன் ராவ் தமிழ்நாட்டுக்கு திரும்பும்போது, நல்லது செய்யும் ‘பெட் அனிமல்’ என்று நம்பப்படும் கண்ணுக்கு தெரியாத ஜின் ஒன்றை பெட்டியில் அடைத்து கொண்டு வருகிறார். தொடர்ந்து தனக்கு நல்லது நடக்க ஜின் வந்த நேரம்தான் என்று அவர் நம்புகிறார். இந்நிலையில், உயிருக்கு போராடும் தனது மனைவி பவ்யா ட்ரிகாவின் ரத்த துளிகள் ஜின்னின் பெட்டியில் இருக்க, அதற்கு ஜின்தான் காரணம் என்று அனைவரும் சொல்ல, ஜின்னை தூக்கி வெளியில் போடுகிறார் முகேன் ராவ். பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.

ஆரம்பத்தில் ஜின்னை காட்டி மிரள வைத்த புது இயக்குனர் டி.ஆர்.பாலா, கிளைமாக்சில் நல்ல ஜின்னும், கெட்ட ஜின்னும் மோதும் காட்சியை விஎஃப்எக்ஸ் மூலம் சிறப்பாக கையாண்டுள்ளார். முகேன் ராவ் இயல்பாக நடித்து, சண்டைக் காட்சிகளில் சரமாரியாக அடித்துள்ளார். பவ்யா ட்ரிகா அழகாக இருக்கிறார். ராதாரவி, பாலசரவணன், இமான் அண்ணாச்சி, வினோதினி வைத்தியநாதன், வடிவுக்கரசி, நிழல்கள் ரவி ஆகியோரும் இயல்பாக நடித்துள்ளனர். அர்ஜூன் ராஜாவின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது. விவேக், மெர்வின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். சிறுவர், சிறுமிகள் மற்றும் பேய் பயம் கொண்டவர்களை ரசிக்க வைக்கும் கதையை தேர்ந்தெடுத்த டி.ஆர்.பாலா, ஜின்னை காமெடியாகவே காட்டுவதா? பயமுறுத்த பயன்படுத்துவதா என்பதில் குழம்பியுள்ளார். எனினும், ஹாரர் திரில்லர் ரசிகர்களை படம் கவரும்.

Tags : Jinn Vimar Sanam ,Mugen Rao ,Tamil Nadu ,Malaysia ,
× RELATED கவர்ச்சி உடை விமர்சனம்: நடிகை நிதி அகர்வால் பதிலடி