×

கோடிகள் கொடுத்தாலும் அந்த மாதிரி படம் இயக்க மாட்டேன்; மணிரத்னம்

சென்னை: எத்தனை கோடி கொடுத்தாலும் அந்த மாதிரி படம் இயக்க மாட்டேன் என்றார் மணிரத்னம். அவர் கூறும்போது, ‘‘எனக்கு மிகவும் பிடித்தது நகைச்சுவை படங்கள் ஆனால், நான் அவற்றில் சிறந்தவன் அல்ல, அதனால் நான் அவற்றை உருவாக்குவதில்லை. நான் அதைப் பார்க்கிறேன். கமல்ஹாசன் நகைச்சுவை செய்கிறார், அவர் செய்யும் நகைச்சுவைப் படங்களும் பிடிக்கும். சில காமெடி படங்கள் நம்பமுடியாதவை. லாஜிக் தாண்டியதாக இருக்கம். நான் அவற்றை ஒருபோதும் உருவாக்க முடியாது. அதனால், கோடிகள் கொடுத்தாலும் மாட்டேன் என்று தான் சொல்ேவன்’’ என்றார் மணிரத்னம்.

இதற்கு பதிலளித்த நடிகர் கமல்ஹாசன், ‘‘மணிரத்னத்தால் நகைச்சுவைப் படங்களை இயக்க முடியாது என்பது அல்ல, ஆனால் அவர் அதைத் தேர்வு செய்யவில்லை’’ என்று கூறினார். இயக்குனர் மணிரத்னம் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு மாஸ்டர் பீஸ் படங்களைக் கொடுத்திருக்கிறார். அவர் ரொமான்ஸ் படங்களைக் கூட அதிகளவில் இயக்கி இருக்கிறார். ஆனால் காமெடி படங்கள் பக்கம் தலைகாட்டியதே இல்லை. அவர் படங்களிலும் பெரியளவில் காமெடி காட்சிகள் இருக்காது.

Tags : Mani Ratnam ,Chennai ,
× RELATED 81 வயது இயக்குனரின் கல்லூரி கலக்கல்