×

மலைவாழ் பெண்ணின் கதை

சென்னை: வி.ஆர்.கம்பைன்ஸ் விமலா ராஜநாயகம் தயாரிக்கும் மூன்றாவது படம் ‘வஞ்சி’. இயக்கம், ராஜேஷ் சி ஆர். கேமராமேன், பின்சீர். இசை, சஜித் சங்கர் எடிட்டர், ஜெயகிருஷ்ணன். ஹீரோ, ராஜேஷ். ஹீரோயின், நயீரா நிகார். முக்கிய கதாபாத்திரத்தில் மாஸ்டர் ராஜ நாயகம் நடிக்கிறார். இவர் குங்ஃபூ இந்திய தலைமை பயிற்சியாளராக உள்ளார். நட்டி நட்ராஜ் நடித்த சமீபத்தில் வெளியான ‘சீசா’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார்.

இந்த கதையை பற்றி டைரக்டர் சொல்லும்போது, ‘‘தமிழ்நாடு கேரளா மலைப் பகுதிகளில் ஏலக்காய் தோட்டத்தில் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்துக்காக வேலை பார்க்கும் மக்களின் உண்மை சம்பவம் இது. தினந்தோறும் வன விலங்குகளால் கூலி தொழிலாளர்களுக்கு ஏற்படுகின்ற மிகவும் மோசமான உயிர் பலிகள் அதற்கு அரசு செய்கின்ற பாதுகாப்பு என்ன என்பதை பற்றிய வாழ்வியல் படம் தான் ‘வஞ்சி’ இதில் வாழுகிற ஒரு பெண்ணின் வாழ்க்கை பற்றி தான் கதை. மலைக் காட்டுப் பகுதிகளில் அங்கு வாழ்கிற மக்களோடு ஒரு பெண்ணாக வாழ்ந்து நடித்து மிரட்டிருக்கிறார் ஹீரோயின் நயீரா நிகார்’’ என்றார்.

Tags : V.R.Combines ,Vimala Rajanayakam ,Rajesh C R. Cameraman ,Pinseer ,Sajith Shankar ,Jayakrishnan ,Hero ,Rajesh ,Heroine ,Nayira Nikar ,Master Rajanayakam ,
× RELATED நடிகரின் பேச்சை கண்டித்த அனசுயா