
பாலிவுட் முன்னணி நடிகரும், இயக்குனருமான ஹிரித்திக் ரோஷன், கடந்த 2000ல் சூசன் கானை காதல் திருமணம் செய்தார். அவர்களுக்கு ஹிரிஹான் ரோஷன், ஹிரிதான் ரோஷன் ஆகிய மகன்கள் இருக்கின்றனர். 2014ல் ஹிரித்திக் ரோஷன், சூசன் கான் விவாகரத்து மூலம் பிரிந்தனர். பிறகு இரு மகன்களும் தாய், தந்தையிடம் மாறி, மாறி இருந்து வருகின்றனர். மகன்களை ஹிரித்திக் ரோஷன் பொதுவெளியில் காட்டாமல் வளர்த்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரது மகன் ஹிரிதான் ரோஷனின் போட்டோ இணையத்தில் கசிந்தது.
இந்நிலையில், சமீபத்தில் மும்பையில் நடந்த தனது சகோதரர் இஷான் ரோஷனின் திருமண கொண்டாட்டத்தில், ஹிரித்திக் ரோஷன் தனது காதலி சபா ஆசாத் மற்றும் தனது மகன்களுடன் கலந்துகொண்டார். அப்போது அவர் மகன்களுடன் சேர்ந்து ‘இஷ்க் தேரா தத்பாவே’ என்ற பாடலுக்கு நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது. இதில் மூவரும் ஒரேமாதிரியான நடன அசைவுகளுடன் ஆடியது ரசிகர்களை கவர்ந்தது. இதை பார்த்த நெட்டிசன்கள், தந்தையை போலவே மகன்களும் சிறப்பாக நடனமாடியதாக பதிவிட்டுள்ளனர்.
ஹிரித்திக் ரோஷன் கடைசியாக ‘வார் 2’ என்ற படத்தில் ஜூனியர் என்டிஆருடன் இணைந்து நடித்திருந்தார். இப்படம் படுதோல்வி அடைந்தது. தற்போது ‘கிரிஷ்’ என்ற படத்தின் 4ம் பாகத்தை இயக்கி நடித்து வருகிறார்.

