×

தோழியை மணந்த ஹாலிவுட் நடிகை

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட்டில் ‘ட்விலைட்’ என்ற படங்களின் மூலம் பிரபலமானவர், நடிகை கிறிஸ்டன் ஸ்டீவர்ட். இதில் நடித்த நடிகர் ராபர்ட் பட்டின்சனை 4 வருடங்களாக தீவிரமாக காதலித்து வந்தார். இந்நிலையில், தவிர்க்க முடியாத சில காரணங்களால் அவர்களுக்கு இடையே பிரேக்அப் ஆனது. பிறகு திரைக்கதை எழுத்தாளரும், நடிகையுமான டைலன் மேயருடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக 2019ல் கிறிஸ்டன் ஸ்டீவர்ட் அறிவித்தார். 2021ல் இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்தினர். இதையடுத்து, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள கிறிஸ்டன் ஸ்டீவர்ட் வீட்டில் இருவருக்கும் திருமணம் நடந்தது. கிறிஸ்டன் ஸ்டீவர்ட் கூறும்போது, ‘டைலன் மேயர் என்னை புரபோஸ் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அவர் மிகவும் அழகான பெண்’ என்று தெரிவித்த நிலையில், புது மணமக்களுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்தும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

Tags : Hollywood ,Los Angeles ,Kristen Stewart ,Robert Pattinson ,
× RELATED 81 வயது இயக்குனரின் கல்லூரி கலக்கல்