
லாஸ்ஏஞ்சல்ஸ்: உலகப் புகழ் பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் விளையாட்டிற்கு பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். 40 வயதாகும் ரொனால்டோ கோல் அடிப்பதில் சிறந்து விளங்கிறார். கால்பந்து ஜாம்பவானாக இருக்கும் ரொனால்டோ தற்போது திரைத்துறையில் கால் பதித்துள்ளார். ‘யுஆர். மார்வ்’(UR MARV) என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
இந்நிறுவனத்தை பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மேத்யூ வாகனுடன் இணைந்து தொடங்கியுள்ளார். இதுகுறித்து ரொனால்டோ தனது எக்ஸ் தளப்பதிவில் ‘‘மேத்யூ வாகனுடன் சேர்ந்து ‘யுஆர். மார்வ்’ என்ற தயாரிப்பு நிறுனத்தை தொடங்கியுள்ளேன். அதன் முதல் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த தகவலை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.
