×

ஆஸ்கரில் புதிய விருது அறிமுகம்

லாஸ்ஏஞ்சல்ஸ்: உலகப் புகழ்பெற்ற ஆஸ்கர் விருதில் புதிய பிரிவு இணைக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த பிரிவில் 2028ம் ஆண்டு முதல் விருதுகள் வழங்கப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் அகடமி இது குறித்து கூறியபோது, அதிரடி ஸ்டண்ட் காட்சிகளுக்கு கௌரவம் செலுத்தும் வகையில் ஸ்டண்ட் காட்சிகளுக்கான ஆஸ்கர் விருது 2028 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட இருக்கிறது. ஆஸ்கர் விருதுகளின் நூறாவது ஆண்டு விழா 2028 என்ற நிலையில் இந்த பிரிவு இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பலர் பாசிட்டிவான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

‘‘சண்டைப் பிரிவுகளுக்காக ஆஸ்கார் விருது வைத்தால் நிச்சயம் டாம் குரூஸ் விருதைப் பெற்று விடுவார்’’ என்று கூறி வருகின்றனர். அதேபோல் ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் தரும் இந்திய படங்களுக்கும் விருது கிடைக்க வாய்ப்புகள் ஏற்படும் என்றும் சினிமா ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags : Oscars ,Los Angeles ,Oscar Academy ,
× RELATED ‘உங்க படத்துல உதவி இயக்குனரா வேலை...