×

காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு ராணுவ வீரர்களின் காவல்காரன் ‘காடி’

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லையில் காவலில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவ வீரர்களின் காவல்காரன்களாக ‘காடி’கள் செயல்படுகின்றன. பாகிஸ்தானில் இருந்து எல்லை வழியாக தீவிரவாதிகள் ஊடுருவல் நடப்பதை தடுக்க, ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் 24 மணி நேரமும் இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தீவிரவாதிகளின் நடமாட்டத்தை கண்டுபிடிக்க, உயர் தொழில்நுட்பங்களையும் அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இதை எல்லாவற்றையும் விட அவர்களுக்கு உற்ற துணையாக இருப்பது, இப்பகுதியில் உலா வசிக்கும் தெருநாய்கள் நான். இவை ‘காடி’ என்ற இனத்தை சேர்ந்தவை. இந்த நாய்களுக்கு முறையாக பயிற்சி அளிக்கப்படுவதில்லை. எனினும், அவற்றின் திறன்கள் வியக்கத்தக்க வகையில் இருப்பதாக ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். எல்லைகளில் 20 அடி அளவுக்கு பனிப்பொழிவு ஏற்படும் நேரத்தில் கூட இவை வீரர்களுடன் தங்கி காவல் பணி புரிகின்றன. இந்த இன நாய்கள் இங்குள்ள மக்கள் நடமாட்டத்தை அறிந்திருக்கின்றன. புதிதாக யார் வந்தாலும் அவை தனது மோப்பத் திறன் மூலமாக அடையாளம் கண்டறிந்து குரைக்கத் தொடங்குகின்றன. அந்நியர்கள் நடமாட்டம் இருக்கும் போதெல்லாம் சத்தமிட்டு வீரர்களை உஷார்படுத்துகின்றன. வீரர்கள் ஓய்வு எடுக்கும்போது, ரோந்து செல்லும்போது கூடவே செல்கின்றன. தீவிரவாதிகள் அமைக்கும் பதுங்கு அரண்கள், சுரங்கப் பாதைகளை கண்டு பிடிக்கின்றன. ஊடுருவல் தடுப்பு நடவடிக்கையின் போது மட்டும் இல்லாமல் வீரர்கள் ஓய்வாக இருக்கும்போது, நெட்வொர்க் இல்லாத  அல்லது கடினமான இடங்களில் வீரர்களோடு விளையாடுவது, அவர்களோடு இருப்பது என ஒரு சிறந்த நண்பராகவும் இவை செயல்படுவதாக ராணுவ அதிகாரி குறிப்பிட்டுள்ளார். * காடி இன நாய்கள் செம்மறி ஆட்டு மந்தைகளுடன் காவல் நாய்களாக வளர்க்கப்படுபவை. இவை போடியா அல்லது பங்காரா என்றும் அழைக்கப்படுகின்றன. கிழக்கு நேபாளம், காஷ்மீர் இமயமலை பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன….

The post காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு ராணுவ வீரர்களின் காவல்காரன் ‘காடி’ appeared first on Dinakaran.

Tags : Guard 'Kadi ,Kashmir border ,Srinagar ,Kadi ,Jammu and ,Kashmir ,Pakistan ,Guard of Security Militants ,Dinakaran ,
× RELATED மோசமான வானிலை : அனந்தநாக் – ரஜோரி தேர்தல் தேதி மாற்றம்