×

ஜிஆர்டி ஜூவல்லர்ஸில் திருமணத்திற்கு ஏற்ப பிரத்யேக நகைகள்

சென்னை: ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் 57 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்தியாவில் நகைத்துறை மற்றும் அதன்  வாடிக்கையாளர்களின் இதயங்களில் நீங்கா அடையாளமாக நீடித்து வருகிறது. பொன்னான தருணங்களுக்கு பிரகாசம் சேர்க்கிறது. இப்போது கைவினைத்திறன் மற்றும் பிரத்யோக வடிவமைப்புகளுடன் திருமணம் மற்றும் கொண்டாட்டங்களுக்காக தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட நகைகளை ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் வழங்குகிறது. இந்திய பண்பாடு மற்றும் பாரம்பரியங்களை நிலைநிறுத்தும் உறுதியான நம்பிக்கையுடன் ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் பாரம்பரியத்தின் பொன்னான போக்கில் நவீனம் மற்றும் நேர்மாறாக புத்தம் புது கலெக்‌ஷன்களை உருவாக்கியுள்ளது. இதுகுறித்து ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் ஜி.ஆர்.அனந்தபத்மநாபன் கூறுகையில், `பிரத்யேக வடிவமைப்புகள் மற்றும் நேர்த்தியான நகைகளுடன், எங்களின் சமீபத்திய திருமண கொண்டாட்டங்கள் கலெக்ஷன்களை பார்த்து பார்த்து உருவாக்கியுள்ளோம்’என்றார். மேலும் ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் நிர்வாக இயக்குனர் ஜி.ஆர்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், `அனைவரையும் உற்சாகப்படுத்தும் மற்றும் ஒவ்வொரு கொண்டாட்ட நிகழ்வுகளுக்கும் ஏற்ற வகையில் சமீபத்திய வடிவமைப்புகள் மற்றும் நகைகளை நாங்கள் எப்போதும் அறிமுகப்படுத்துகிறோம். திருமண சீசனில் எங்கள் வாடிக்கையாளர்கள் பல்வேறு விதமான தயாரிப்புகள் மற்றும் வகைகளில் இருந்து விருப்பமானதை தேர்ந்தெடுத்து கொண்டாடி மகிழ விரும்புகிறோம்’என்றார்….

The post ஜிஆர்டி ஜூவல்லர்ஸில் திருமணத்திற்கு ஏற்ப பிரத்யேக நகைகள் appeared first on Dinakaran.

Tags : GRT Jewelers ,South India ,Dinakaraan ,
× RELATED தென்னிந்தியாவின் முதல் பாஜக எம்எல்ஏ காலமானார்!!