×

இயல்பான அளவை காட்டிலும் தென்மேற்கு பருவமழை 87% கூடுதலாக பெய்துள்ளது: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல்

சென்னை: தமிழகத்தில், தென்மேற்கு பருவமழை பொழிவு இயல்பான அளவை காட்டிலும் 87% கூடுதலாக மழை பெய்துள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியுள்ளார். இதுகுறித்து வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:தென்மேற்கு பருவமழை காலத்தில், 01-06-2022 முதல் 31-08-2022 (நேற்று முன்தினம்) முடிய 392.1 மி.மீ. மழை பெய்துள்ளது.  இது இயல்பான மழை அளவை காட்டிலும் 87 சதவீதம் கூடுதல். கடந்த 24 மணி நேரத்தில் 36 மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில் மாநில சராசரி  10.04  மி.மீ. ஆகும். இதுவரை மழையில் 5 ஆண், 2 பெண், 2 குழந்தைகள் என 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேட்டூர் அணையின் நீர்மட்டம், அணையின் அதிகபட்ச கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அணைக்கு நீர்வரத்து அதிகப்படியாக உள்ளதால், நேற்று வினாடிக்கு 55,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கொள்ளிடம் ஆற்றில் அதிகப்படியான கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் பவானி அணையில் இருந்து 9,500 கன அடி நீர்  வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் மற்றும் பவானிசாகர் அணையில் இருந்து தொடர்ந்து அதிக அளவு உபரி நீர் வெளியேற்றப்படுவதால், ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு கருதி, பொதுவான எச்சரிக்கை மூலம் 17.69 லட்சம் செல்போன்களுக்கு எச்சரிக்கை எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டுள்ளது.பொதுமக்கள் மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையத்தை முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவும், வாட்ஸ் அப் எண் 94458 69848 மூலமாகவும் தொடர்பு கொண்டு புகார்களை பதிவு செய்யலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

The post இயல்பான அளவை காட்டிலும் தென்மேற்கு பருவமழை 87% கூடுதலாக பெய்துள்ளது: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister KKSSR ,Ramachandran ,Chennai ,Minister ,KKSSR ,Tamil Nadu ,South West ,South ,Minister KKSS ,.R. Ramachandran ,Dinakaran ,
× RELATED வாட்ஸ்அப் தொடர்பாக பாஜகவினர் இடையே மோதல் : 2 பேர் கைது