×

ராகுல் டிராவிட்டுக்கு அர்ப்பணிக்கிறேன்: டெஸ்ட் படம் குறித்து சித்தார்த் நெகிழ்ச்சி

சென்னை: ஒய்நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் எஸ்.சஷிகாந்த் இயக்குனராக அறிமுகமாகும் படம், ‘டெஸ்ட்’. இது வரும் ஏப்ரல் 4ம் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதன் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நெட்பிளிக்ஸ் இந்தியாவின் வைஸ் பிரசிடென்ட் மோனிகா ஷெர்கில் தலைமை தாங்கினார். அப்போது மாதவன் பேசுகையில், ‘டெஸ்ட் படத்தில் நான் ஏற்றுள்ள கேரக்டர், எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது’ என்றார்.

அடுத்து சித்தார்த் பேசுகையில், ‘கிரிக்கெட் பார்க்கும்போது ஏற்படும் பதற்றமும், பரபரப்பும் ‘டெஸ்ட்’ படம் பார்க்கும்போதும் உங்களுக்கு ஏற்பட்டால், அதுவே எங்கள் குழுவுக்கு கிடைத்த மகத்தான வெற்றி என்பேன். எனக்கு கிரிக்கெட்டர் ராகுல் டிராவிட்டை மிகவும் பிடிக்கும். இப்படத்தில் நான் ஏற்று நடித்துள்ள கேரக்டரை அவருக்கு நான் டெடிகேட் செய்கிறேன்’ என்றார். பல வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழில் நடித்துள்ள மீரா ஜாஸ்மின் பேசுகையில், ‘அற்புதமான கதை கொண்ட இப்படத்தில் நானும் நடித்திருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்’ என்றார்.

Tags : Rahul Dravid ,Siddharth Laichi ,Chennai ,Ynot Studios ,S. Shashikant ,Netflix ,India ,Vice President ,Monica… ,
× RELATED நடிகரின் பேச்சை கண்டித்த அனசுயா