×

ராவணன் வேடத்தில் நடிப்பது ஏன்?

மும்பை: கன்னடத்தில் அறிமுகமாகி, பிறகு ‘கேஜிஎஃப்’ படத்தின் 2 பாகங்களின் மூலம் மிகப்பெரிய வெற்றிபெற்று, வசூலில் புதிய சாதனை படைத்ததன் மூலம் பான் இந்தியா ஸ்டாராக மாறியவர், யஷ். தற்போது ‘தங்கல்’ படத்தின் இயக்குனர் நிதிஷ் திவாரியின் ‘ராமாயணா’ என்ற 2 பாகங்கள் கொண்ட பன்மொழி படத்தில் ராவணன் வேடத்தில் நடித்து வரும் யஷ், இதுகுறித்து கூறியதாவது: ராமாயணத்தில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம், ராவணன். ஒரு நடிகராக ராவணன் வேடத்தில் நடிப்பது உற்சாகமாக இருக்கிறது. ராவணனை தவிர வேறெந்த வேடம் கொடுத்தாலும் இப்படத்தில் நான் நடித்திருக்க மாட்டேன். இந்த கதாபாத்திரத்தில் நிறைய நுணுக்கங்களும், சுவாரஸ்யங்களும் ஒளிந்திருக்கின்றன. அதை எல்லாம் வெளிப்படுத்த எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. ராமாயணத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் மட்டுமே பல்வேறு பக்கங்கள் ஒளிந்திருக்கிறது. தற்போது நடிகை கீது மோகன்தாஸ் இயக்கும் ‘தி டாக்சிக்’ என்ற பான் இந்தியா படத்தில் நடித்து வருகிறேன்.

Tags : Ravana ,Mumbai ,Yash ,Kannada ,Nitish Tiwari ,
× RELATED டியர் ரதி பிரச்னையில் சிக்கும் டேட்டிங் ஜோடி