×

கிரிக்கெட் வீரர் சிராஜுடன் மஹிரா காதல்?

ஸ்ரீநகர்: கிரிக்கெட் வீரர் சிராஜ், நடிகை மஹிரா சர்மா காதலிப்பதாக தகவல்கள் பரவியுள்ளது. இந்தி, பஞ்சாபியில் படங்களில் நடித்துள்ள மஹிரா சர்மா, காஷ்மீரை சேர்ந்தவர். இவர் இந்திய கிரிக்கெட் அணி வீரர் சிராஜும் கடந்த சில மாதங்களாக டேட்டிங்கில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. மஹிராவின் இன்ஸ்டா பதிவுகளை சிராஜ் தொடர்ந்து லைக் செய்வார். அதேபோல் சிராஜ் புகைப்படங்களையும் மஹிரா லைக் செய்வார்.

இருவரும் தங்களது காதலை ரகசியமாக வைத்திருப்பதாக சொல்லப்பட்டது. இது பற்றி இப்போது மஹிரா பதில் அளித்துள்ளார். அவர் கூறும்போது, ‘இது எல்லாம் புரளிதான். எங்களுக்குள் எந்த தொடர்பும் கிடையாது’ என தெரிவித்துள்ளார். மஹிராவின் அம்மா சானியா சர்மா கூறும்போது, ‘நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? மக்கள் ஏதாவது சொல்வார்கள். இப்போது என் மகள் பிரபலமாகிவிட்டதால், மக்கள் அவளுடைய பெயரை யாருடனும் இணைப்பார்கள். நாம் அவற்றை நம்ப வேண்டுமா?’ என கோபமாக கேட்டுள்ளார்.

Tags : Mahira Sharma ,Siraj ,Srinagar ,Kashmir ,
× RELATED ஜமா பாரி இளவழகன் ஜோடியாக ரம்யா ரங்கநாதன்