சென்னை: செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித்குமார் தயாரிக்கும் படத்தை வெற்றிமாறனின் இணை இயக்குனர் சுரேஷ் இயக்குகிறார். இதில் விக்ரம் பிரபு, புதுமுகம் அக்ஷய் குமார் நடிக்கிறார்கள். படம் குறித்து இயக்குனர் சுரேஷ் கூறியது: ‘டாணாக்காரன்’ இயக்குனர் தமிழ், போலீஸ்காரராக இருந்தவர். ஒரு முறை சிறையிலிருந்து கோர்ட்டுக்கு குற்றவாளி ஒருவரை அவர் அழைத்து சென்றார். அப்போது நடந்த உண்மை சம்பவம்தான் இந்த படத்தின் கதை. இதில் போலீஸ்காரராக விக்ரம் பிரபு நடிக்கிறார். குற்றவாளியாக அக்ஷய் குமார் நடிக்கிறார். இவர், தயாரிப்பாளர் லலித்குமாரின் மகன். விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த புதுமுகம் அனந்தா நடிக்கிறார். அக்ஷய்க்கு ஜோடியாக அனிஷ்மா அனில்குமார் நடிக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. 47 நாளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு முடிக்க திட்டமிட்டுள்ளோம். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு.

