- தினேஷ்
- ஜல்லிக்கட்டில்
- சென்னை
- ராஜேஷ்.எம்
- எஸ். முரளி கிரிஷ்
- ரேஷ்மா வெங்கட்
- மதுனிகா
- பாஸ்கர் ஆறுமுகம்
- இன்பராஜ் ராஜேந்திரன்

சென்னை: இயக்குனர் ராஜேஷ்.எம் உதவியாளர் எஸ்.முரளி கிரிஷ் எழுதி இயக்கியுள்ள படம், ‘கருப்பு பல்சர்’. இதில் ‘கெத்து’ தினேஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். ரேஷ்மா வெங்கட், மதுனிகா ஜோடியாக நடித்துள்ளனர். பாஸ்கர் ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடல்கள் எழுதி இன்பராஜ் ராஜேந்திரன் இசை அமைத்துள்ளார். யசோ எண்டர்டெயின்மெண்ட் சார்பில் டாக்டர் எம்.சத்யா தயாரித்துள்ளார். படம் குறித்து எஸ்.முரளி கிரிஷ் கூறியதாவது:
மாடுபிடி வீரர் தினேஷின் பெயர், கருப்பு. ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டில் ஒரு காளையை அடக்கி வெற்றிபெறும் அவருக்கு பல்சர் வண்டி பரிசாக கிடைக்கிறது. பிறகு அந்த பல்சர், சென்னையில் இருக்கும் இன்னொரு தினேஷுக்கு கிடைக்கிறது. இதையடுத்து நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் என்ன என்பது கதை. ஜல்லிக்கட்டு காட்சியைப் படமாக்கியபோது, களத்தில் தினேஷுக்கு ரத்த காயம் ஏற்பட்டது. உடனுக்குடன் சிகிச்சை பெற்று நடித்தார். ஷூட்டிங்கில் காளைகளைப் பயன்படுத்தியதால், அதற்கான தடையில்லா சான்றிதழ் பெற காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, ரிலீஸ் தேதியை உடனே அறிவிக்க முடியவில்லை.
