×

இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கான அரசாணையை உடனே வெளியிடுக: தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்..!!

சென்னை: இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கான அரசாணையை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தம் ட்விட்டர் பதிவில், தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளில் மக்களுக்கு இலவசமாக வழங்குவதற்கான வேட்டி, சேலைகளை விசைத்தறிகள் மூலம் உற்பத்தி செய்வதற்கான அரசாணை இன்னும் வழங்கப்படவில்லை. அதனால் விசைத்தறி நெசவாளர்கள் போதிய வேலைவாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். வேட்டி, சேலை தயாரிப்புக்கான ஆணை வழக்கமாக ஜூன் மாதம் வெளியிடப்படும். ஆனால், இப்போது ஆகஸ்ட் மாதம் ஆகியும் அரசாணை வெளியிடப்படாததால், நடப்பாண்டில் தங்களுக்கு வேலை கிடைக்காதோ? என்ற ஐயம் நெசவாளர்களிடம் ஏற்பட்டுள்ளது. இது போக்கப்பட வேண்டும். எனவே, இலவச வேட்டி, சேலை தயாரிப்புக்கான ஆணையை வழக்கமான நடைமுறைகளை பின்பற்றி விசைத்தறி சங்கங்களுக்கு வழங்க வேண்டும். அதன் மூலம் விசைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை தமிழ்நாடு அரசு பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். …

The post இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கான அரசாணையை உடனே வெளியிடுக: தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்..!! appeared first on Dinakaran.

Tags : Government ,Free Veti and Saree Production ,Pamaka Leader ,Annpurani Ramadas ,Government of Tamil Nadu ,Chennai ,Government for Free Veti and Saree Production ,Bambaka ,Anbumani ,Govt ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை