×

75வது சுதந்திர தினத்தையொட்டி 10 ஆண்டுகால சிறைவாசிகளுக்கு விடுதலை; அரசுக்கு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா நேற்று வெளியிட்ட அறிக்கை: நாட்டின் பல்வேறு சிறைகளில் உள்ள விசாரணைக் கைதிகள் தொடர்பான மனிதாபிமான பிரச்னையில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்கு சட்ட உதவிகளை வழங்கும் பொறுப்பை மாவட்ட சட்டப் பணிகள் ஆணையங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். விசாரணை கைதிகளை விரைவாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் விடுதலையில் மாவட்ட நீதிபதிகள் கவனம் செலுத்த வேண்டுகிறேன் என டெல்லியில் நடைபெற்ற மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருந்தார். இந்த வாய்ப்பை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சரியாக பயன்படுத்தி இஸ்லாமிய சிறைவாசிகள் உள்பட 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் சிறைவாசிகளை நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி விடுதலை செய்ய வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்….

The post 75வது சுதந்திர தினத்தையொட்டி 10 ஆண்டுகால சிறைவாசிகளுக்கு விடுதலை; அரசுக்கு முஸ்லிம் லீக் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : 75th Independence Day ,Muslim League ,Chennai ,Tamil Nadu Muslim League ,President VMS ,Mustapha ,Dinakaran ,
× RELATED பாகிஸ்தான் முஸ்லிம் லீக் தலைவராக நவாஸ் ஷெரீப் மீண்டும் தேர்வு