×

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் தலைவராக நவாஸ் ஷெரீப் மீண்டும் தேர்வு

லாகூர்: பாகிஸ்தானில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் பனாமா ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து கடந்த 2018 பிப்ரவரியில் கட்சி தலைவர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இங்கிலாந்தில் நான்கு ஆண்டுகள் தங்கி இருந்த நவாஸ் கடந்த அக்டோபரில் பாகிஸ்தான் திரும்பினார். தகுதி நீக்கம் செய்யப்பட்டு ஆறு ஆண்டுகள் கழிந்த நிலையில் நேற்று நடந்த பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் பொது கவுன்சில் கூட்டத்தில் நவாஸ் ஷெரிப் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

The post பாகிஸ்தான் முஸ்லிம் லீக் தலைவராக நவாஸ் ஷெரீப் மீண்டும் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Nawaz Sharif ,Pakistan Muslim League ,Lahore ,Nawaz ,Supreme Court ,Panama ,England… ,President ,Dinakaran ,
× RELATED லாகூர் ஒப்பந்தத்தை மீறியதாக நவாஸ் ஷெரீப் ஒப்புதல்