×

தைப்பூசத்தன்று (8-2-2020)

* உலகம் தோன்றியதாக கூறப்படுகிறது.
* முருகப்பெருமான் வள்ளியை மணம் செய்து கொண்டார்.
* ரங்கநாதர் தனது தங்கையான சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வரிசைகள் கொடுப்பார்.
* சிவபெருமான் முதன்முதலாக தில்லையில் நடனமாடினார்.
* வள்ளலார் அருட்ஜோதியில் கலந்தார்.
* வரதபாண்டியன் பிரம்மஹத்தி நீங்கப் பெற்றார்.
* ஹம்சத்துவ மன்னனும் பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றார்.

கல்வெட்டில் தைப்பூசம்!

திருவிடைமருதூர் அருள்மிகு மகாலிங்கசுவாமி கோயில் கல்வெட்டில் ஆண்டுதோறும் தைப்பூச விழாவைச் சிறப்பாக கொண்டாடுவதற்காக மன்னர்களால் வழங்கப்பெற்ற மானியங்கள் குறித்த செய்திகள் காணப்படுகின்றன.

தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை!

மலேசியா நாட்டிலுள்ள பத்துமலையில் தைப்பூச விழாவை முன்னிட்டு வேல் வழிபாட்டுடன் முருகப்பெருமான் போற்றப்படுகிறார். அன்றைய தினம் முருகப்பெருமான் வெள்ளி ரதத்தில் கோலாலம்பூர் மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து பத்துமலைக்கு வருவது கண்கொள்ளாக்காட்சியாகும். மலேசிய அரசும் இதற்காக அரசு விடுமுறை அளித்துள்ளது.

மயிலையில் தைப்பூசம்!

ஒரு தைப்பூச நன்னாளில்தான் மயிலையில் திருஞானசம்பந்தர் பூம்பாவை என்ற பெண்ணை அஸ்தி கலசத்திலிருந்து உயிர் மீட்டார். மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடந்த நிகழ்வு இது.

ஏழு திரைகள்

தைப்பூச நன்னாளில் வடலூரில் ஏழு திரைகள் விலகி ஜோதி தரிசனம் நிகழும். ஏழு திரைகள் உணர்த்தும் பொருள் இதுதான்.
கருப்புத்திரை     -     மாயாசக்தி
நீலத்திரை     -        கிரியாசக்தி
பச்சைத்திரை     -     பராசக்தி
சிவப்புத்திரை    -     இச்சாசக்தி
பொன்னிறத்திரை -     ஞானசக்தி
வெண்மைத்திரை -     ஆதிசக்தி
கலப்புத்திரை        -     சிற்சக்தி

-நெ. ராமன்

Tags : Taupo ,
× RELATED எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள...