×

பொங்கல் விருந்து; 3 படங்கள் ரிலீஸ்

சென்னை: பொங்கல் பண்டிகைக்கு இந்த வருடம் அஜித்தின் ‘விடா முயற்சி’ உள்பட 3 படங்கள் ரிலீசாகிறது. அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கியுள்ள படம் ‘விடா முயற்சி’. லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். இதில் திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதியே ரிலீசாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க அஜர்பைஜானில் நடந்துள்ளது. ஆக்‌ஷன் திரில்லர் படமாக இது உருவாகியுள்ளது.

இயக்குனர் ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதில், ராம்சரண் ஹீரோவாக நடிக்க எஸ்.ஜே.சூர்யா, கியாரா அத்வானி, ஜெயராம், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. பாலாவின் ‘வணங்கான்’ படமும் பொங்கல் ரேஸில் இணைந்திருக்கிறது. முதலில். சூர்யாவை வைத்து இப்படம் துவங்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் சூர்யா இப்படத்திலிருந்து விலகிவிட அருண்விஜய் உள்ளே வந்தார்.

இந்த படத்தில் அவர் காது கேட்காத, வாய் பேச முடியாத வேடத்தில் நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியாகும் பாலா படம் இது. அதனால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு இருக்கிறது. தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸ் எதிர்பார்க்கும் படங்கள் இவை 3தான். இது தவிர சங்கராந்திக்கு தெலுங்கில் பாலகிருஷ்ணாவின் ‘டாக்கு மகராஜ்’, வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ‘சங்ராந்திக்கி வஸ்துன்னம்’ ஆகிய படங்களும் வெளியாக உள்ளன.

Tags : Pongal festival ,Chennai ,Ajith ,Magizh Thirumeni ,Lyca Productions ,Anirudh ,Trisha ,Arjun ,Regina ,Aarav… ,
× RELATED ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க 30 குழுக்கள் அமைப்பு