×

ஐடென் டிட்டி: வி ம ர் ச ன ம்

ஒரு கொலையை பார்த்து அதிர்ச்சியடைந்த திரிஷா, போலீசில் புகார் கொடுக்கச் செல்லும்போது, எதிர்பாராத விபத்தில் சிக்குகிறார். இதில் பார்வை இழக்கிறார். குற்றவாளியைக் கண்டுபிடிக்க, ஸ்கெட்ச் ஆர்ட்டிஸ்ட் டொவினோ தாமஸின் உதவியை நாடுகிறது போலீஸ். திரிஷா சொன்னதை வைத்து குற்றவாளியின் உருவத்தை அவர் வரையும்போது, அதிர்ச்சி கிடைக்கிறது. குற்றவாளி யார், அவரை போலீஸ் கண்டுபிடித்ததா, திரிஷாவின் நிலை என்ன என்பது மீதி கதை. முழுநீள கிரைம் திரில்லர் கதையை அகில் பால், அனாஸ் கான் ஆகியோர் விறுவிறுப்பாக எழுதி இயக்கியுள்ளனர். முற்பகுதி திரைக்கதை படத்துக்கு பலம்.

பிற்பகுதியில் சற்று தடுமாறுகிறது. வழக்கமான ஸ்டைலில் டொவினோ தாமஸ் நடித்து அசத்தியுள்ளார். திரிஷா அழகாக இருக்கிறார், ஆர்ப்பாட்டம் இல்லாமல் இயல்பாக நடித்துள்ளார். விநய் ராய் விசாரிக்கும் தோரணை விறுவிறுப்பை அதிகரிக்கிறது. அஜூ வர்கீஸ், ஷம்மி திலகன் உள்பட பலர், கொடுத்த வேலையை சிறப்பாகச் செய்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை, படத்தின் கதை நகர்வுக்கு பெரும்பலம் சேர்த்துள்ளது. ஒளிப்பதிவாளர் அகில் ஜார்ஜ், சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் படத்துக்கான காட்சிகளை நேர்த்தியாகப் பதிவு செய்துள்ளார். ட்விஸ்ட்டுக்கு மேல் ட்விஸ்ட் என்று ரசிகர்களை அசத்தினாலும், லாஜிக் மீறல்களை இயக்குனர்கள் கவனித்திருக்க வேண்டும்.

Tags : Iden Ditty ,Sanam ,Trisha ,Tovino Thomas ,
× RELATED வி ம ர் ச ன ம்