×

கல்யாணம் என்றாலே எனக்கு பயம்: சொல்கிறார் ஸ்ருதி ஹாசன்

சென்னை: கல்யாணம் என்றாலே எனக்கு பயமாக இருக்கிறது என்கிறார் ஸ்ருதிஹாசன்.
ரஜினியுடன் ‘கூலி’, பிரபாசுடன் ‘சலார் 2’ படங்களில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன் கூறியது:
காதல் இல்லாமல் நானில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அடிக்கடி காதலில் விழுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ரிலேஷன்ஷிப் என்பது எனக்கு பிடித்தமானதுதான். அதில் சந்தேகம் இல்லை. அதனாலேயே எனக்கு பிடித்தவர்களுடன் நெருங்கிப் பழகுகிறேன். ஆனால் இவர்தான் ஸ்பெஷல் என சொல்லும் அளவுக்கு யாரையும் நான் பார்க்கவில்லை என்பதும் உண்மைதான்.

அதனால்தான் என்னவோ எனது காதல் நிலைக்காமல் போகிறது. அதற்காக வருத்தப்பட்டு பிரயோஜனம் கிடையாது. வாழ்க்கையில் முன்னேறி சென்று கொண்டே இருக்கிறேன். அதே சமயம், கல்யாணத்தில் எனக்கு எப்போதுமே நம்பிக்கை வருவதில்லை. காதலித்து, திருமணம் செய்து நன்றாக அன்பாக இருக்கும் ஜோடிகளையும் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் நிறைய திருமணங்கள் தோல்வியில் முடிவதால் எனக்கு திருமணம் என்றாலே பயமாக இருக்கிறது. இவ்வாறு ஸ்ருதிஹாசன் கூறினார்.

Tags : Shruti Haasan ,Chennai ,Rajinikanth ,
× RELATED மன்மோகன்சிங் அற்புதமான மனிதர்: நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்