×

காதலனுடன் சாக்‌ஷி அகர்வால் திடீர் திருமணம்

சென்னை: தனது நீண்ட நாள் காதலன் நவ்நீத் என்பவரை சாக்‌ஷி அகர்வால் திடீரென்று திருமணம் செய்துகொண்ட தகவல் வைரலாகி வருகிறது. மாடலாக இருந்து நடிகையாக மாறிய சாக்‌ஷி அகர்வால், முன்னதாக பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வணிக ஆலோசகராகப் பணியாற்றினார். பிறகு கன்னடத்தில் நடிகையாக அறிமுகமானார். தமிழில் ரஜினிகாந்துடன் ‘காலா’, அஜித் குமாருடன் ‘விஸ்வாசம்’ மற்றும் ‘யூகன்’, ‘திருட்டு விசிடி’, ‘ஆத்யன்’, ‘டெடி’, ‘சிண்ட்ரெல்லா’, ‘அரண்மனை 3’, ‘நான் கடவுள் இல்லை’, ‘பஹீரா’ உள்பட பல படங்களில் நடித்தார். ‘ஆக்‌ஷன்’ என்ற படத்தில் ஹீரோயின் அகன்ஷா புரிக்கு டப்பிங் பேசினார்.

இந்நிலையில் சாக்‌ஷி அகர்வால் தனது பால்ய கால நண்பரும், பல வருட காதலருமான நவ்நீத் என்பவரை நேற்று முன்தினம் கோவாவிலுள்ள நட்சத்திர ஓட்டலில் திருமணம் செய்துகொண்டார். இதில் இருவீட்டு உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டனர். தனது திருமணம் குறித்து சாக்‌ஷி அகர்வால் கூறுகையில், ‘இந்த நன்னாளை ஒரு கனவு போல் உணர்கிறேன். எனது சிறந்த நண்பர் நவ்நீத்தை திருமணம் செய்துகொள்வது என் வாழ்நாளின் லட்சியமாக இருந்தது’ என்றார். நவ்நீத் கூறுகையில், ‘சாக்‌ஷி என் வாழ்க்கையை நிறைவு செய்துள்ளார். இன்றைய தினம் எங்களின் காதலின் தொடக்கத்தைக் குறிக்கிறது’ என்றார். திருமணத்துக்குப் பிறகும் சாக்‌ஷி அகர்வால் தொடர்ந்து சினிமாவில் நடிப்பார் என்று ெதரிகிறது.

Tags : Sakshi Agarwal ,Chennai ,Navneet ,Kannada… ,
× RELATED சயின்ஸ் ஃபிக்‌ஷன் திரில்லர் தி ஸ்டிங்கர்