×

லாரா: விமர்சனம்

முகம் தெரியாமல் சிதைக்கப்பட்ட ஒரு பெண்ணின் உடல் கடற்கரையில் ஒதுங்கிக்கிடப்பதாக, காரைக்கால் நிரவி காவல் நிலையத்துக்கு ஒரு தகவல் கிடைக்கிறது. தனது மனைவி ஸ்டெல்லாவை காணவில்லை என்று லாரன்ஸ் என்பவன் புகார் கொடுக்கிறான். பிறகு அந்த சடலத்தைப் பார்த்த லாரன்ஸ், அது தன் மனைவி இல்லை என்று சொல்கிறான். தன் மனைவியை அவனே கொலை செய்துவிட்டு ஏமாற்றுகிறான் என்ற தகவல் காவல் நிலையத்துக்கு கிடைக்கிறது. அதன் பிறகு நடப்பதே மீதி கதை. கேரக்டர் சிறியது என்றாலும், கதைக்கு முக்கியத்துவம் சேர்க்கிறது என்பதை உணர்ந்து அசோக் குமார் சிறப்பாக நடித்துள்ளார்.

லாராவாக வந்து, அனுதாபத்தை அள்ளிக்கொள்கிறார் அனுஷ்ரேயா ராஜன். விசாரணை செய்யும் இன்ஸ்பெக்டராக தயாரிப்பாளர் கார்த்திகேசன் இயல்பாகவும், அழுத்தமாகவும் நடித்துள்ளார். ஸ்டெல்லாவாக வெண்மதி, ஜெயாவாக வர்ஷினி, எம்எல்ஏவாக மேத்யூ வர்கீஸ் மற்றும் பாலா, எஸ்.கே.பாபு, திலீப் குமார், இ.எஸ்.பிரதீப் ஆகியோரும் கச்சிதமாக நடித்துள்ளனர். காரைக்கால் பகுதியை ஆர்.ஜே.ரவீன் கேமரா யதார்த்தமாக ஒளிப்பதிவு செய்திருக்கிறது. ரகு ஸ்ரவன் குமாரின் பின்னணி இசை, கிரைம் திரில்லருக்கு தேவையான பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாடல்கள் ஒருமுறை கேட்கும் ரகம். மணி மூர்த்தி இயக்கியுள்ளார். திரைக்கதையின் வேகத்தை இன்னும் அதிகரித்திருக்க வேண்டும்.

Tags : Laura ,Karaikal Niravi Police Station ,Lawrence ,Stella ,
× RELATED செனட் பதவியில் விருப்பம் இல்லை: டிரம்ப் மருமகள் லாரா அறிவிப்பு