×

அல்லு அர்ஜுனுக்கு கூடிய கூட்டம் ஜேசிபி வந்தாலும் கூட்டம் வரும்: சித்தார்த் கருத்துக்கு ரசிகர்கள் கொதிப்பு

சென்னை: நடிகர் சித்தார்த் சமீபகாலமாக பேட்டிகளில் பேசும் விஷயங்கள் இணையத்தில் வைரல் ஆகின்றன. சமீப காலமாக உங்களுக்கு பெரிய அளவில் வெற்றி படம் இல்லையே என ஒருவர் கேட்டதற்கு, ‘இந்தியன் 2 உங்களுக்கு படமாக தெரியவில்லையா? நான் ஜெயித்துக்கொண்டு தான் இருக்கிறேன்’ என சித்தார்த் கோபத்துடன் பதில் அளித்து இருந்தார். அந்த வீடியோவும் இணையத்தில் வைரல் ஆகி இருந்தது.

இந்நிலையில் மற்றொரு பேட்டியில் சித்தார்த், அல்லு அர்ஜுன் மற்றும் ‘புஷ்பா 2’ பற்றி பேசி இருக்கிறார். பாட்னாவில் அல்லு அர்ஜுனை பார்க்க கூடிய கூட்டம் பெரிய அளவில் இருந்ததே என தொகுப்பாளர் கேட்டதற்கு, ‘கூட்டம் கூடுவதெல்லாம் ஒரு விஷயமா. அதுவும் இந்தியாவில். ஜேசிபியை கொண்டு வந்து நிறுத்தினால் கூட கூட்டம் கூடும். பீகாரில் கூட்டம் கூடுவது அவ்ளோ பெரிய விஷயம் இல்லை.

இந்தியாவில் கூட்டம் கூடுவதற்கும் தரத்துக்கும் சம்பந்தம் இல்லை. அப்படி பார்த்தால் எல்லா அரசியல் கட்சியும் ஜெயித்துக்கொண்டே இருக்க வேண்டுமே. எல்லாருக்கும் கூட்டம் கூடுகிறது. பிரியாணி, குவாட்டர் பாட்டில் என அதை சொல்வார்கள்’ என சித்தார்த் பேசி இருக்கிறார். இதற்கு அல்லு அர்ஜுன் ரசிகர்கள் தற்போது சித்தார்த்துக்கு டிவிட்டரில் கோபமாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Tags : Allu Arjun ,JCB ,Siddharth ,Chennai ,
× RELATED பொறுப்பற்ற முறையில் செயல்படுவதா..?...