×

சின்ன பட்ஜெட் படங்களில் குத்தாட்டம் போட மாட்டேன்: ஸ்ரீலீலா கறார்

ஐதராபாத்: புஷ்பா 2: தி ரூல்’ என்ற படத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து ஒரு பாடலில் ஸ்ரீலீலா ஆடியிருந்தார். இதை தொடர்ந்து அடுத்தடுத்து இதுபோல் நடனமாட தன்னை அழைப்பதாகச் சொல்லும் அவர் கூறியதாவது: உலகமே எதிர்நோக்கிய படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடுவதும், ஹீரோயினாக நடிப்பதும் ஒன்றுதான். அந்தளவுக்கு இப்படத்தின் மூலமாக எனக்கு வரவேற்பு கிடைக்கும் என்று தெரியும்.

அதனால்தான் சம்மதித்தேன். அதற்காக இதுபோல் எல்லா படத்திலும் ஆடும்படி கேட்டால், என்னால் முடியாது என்றே சொல்ல முடியும். சின்ன பட்ஜெட் படங்களில் கண்டிப்பாக ஆட மாட்டேன். இதைச் சொல்ல வெட்கப்படவில்லை. நானும் மற்றவர்களைப் போல், எனது லாபத்தைப் பார்க்கும் சராசரி ஒரு ஆர்ட்டிஸ்ட்தான். தமிழில் எனக்கு வாய்ப்புகள் அதிகமாக வருவது நிஜம். கால்ஷீட் பிரச்னை எதுவும் ஏற்படாவிட்டால், தமிழிலும் நான் தொடர்ந்து நடிப்பேன்.

Tags : Srileela Karar ,Hyderabad ,Srileela ,Allu Arjun ,
× RELATED புஷ்பா 2 ஓடிடி ரிலீஸ் எப்போது?