×

புஷ்பா 2 ஓடிடி ரிலீஸ் எப்போது?

ஐதராபாத்: பி.சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில், ஸ்ரீலீலா நடித்த ‘புஷ்பா 2: தி ரூல்’ என்ற படம், கடந்த 5ம் தேதி திரைக்கு வந்து வெற்றிபெற்றது. இப்படம் கடந்த 14 நாட்களில் 1,508 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் ஜனவரி 9ம் தேதி முதல் இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவியது. இதுகுறித்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ‘நாங்கள் தயாரித்த ‘புஷ்பா 2’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த வதந்திகள் பரவி வருகின்றன. இந்த விடுமுறை சீசனில் ‘புஷ்பா 2’ படத்தை திரையரங்குகளில் கண்டு ரசியுங்கள். 56 நாட்களுக்கு இப்படம் எந்த ஓடிடியிலும் வெளியாகாது’ என்று கூறப்பட்டுள்ளது.

Tags : Hyderabad ,Allu Arjun ,Rashmika Mandana ,Bahat Basil ,Srileela ,Sukumar ,
× RELATED தெலங்கானாவில் கைது செய்யப்பட்ட...