×

வாடிவாசல் படத்திலிருந்து சூர்யா நீக்கம்?

சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கெளதம் மேனன், ராஜீவ் மேனன், பவானி ஸ்ரீ, சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘விடுதலை 2’ திரைப்படம் நேற்று வெளியானது. சமீபத்தில் நடைபெற்ற ஃபேன்ஸ் மீட் நிகழ்ச்சியில் வெற்றிமாறன் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, ‘வடசென்னை 2’ படம் எப்போ வரும் என ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ‘இப்போதைக்கு பிளான் இல்லை’ என வெற்றிமாறன் கூறியுள்ளார். வடசென்னை திரைப்படம் தனுஷ், சமுத்திரகனி, அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2018ம் ஆண்டு வெளியானது. அந்த படத்தில் வடசென்னை மக்களை தவறாக சித்தரித்து விட்டார் வெற்றிமாறன் என கடுமையான சர்ச்சைகள் கிளம்பின. அதன் பின்னர், ஆண்ட்ரியா அரை நிர்வாணமாக நடித்த காட்சிகளுக்கும் எதிர்ப்புக் கிளம்ப அந்த காட்சிகள் நீக்கப்பட்டது.

சூர்யாவுடன் இணைந்து ‘வாடிவாசல்’ படத்தை வெற்றிமாறன் இயக்கப் போவதாக சில ஆண்டுகள் முன்னதாக டைட்டில் அறிவிப்புடன் வெளியானது. ஆனால், இதுவரை அந்த படம் ஆரம்பிக்கவே இல்லை. சூர்யா கங்குவா, சூர்யா 44 மற்றும் சூர்யா 45 என அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக அமல் நீரத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், அடுத்ததாக ‘வாடிவாசல்’ படம் தான் பண்ணப் போகிறேன் என உறுதியாக வெற்றிமாறன் கூறியுள்ளார். வாடிவாசல் படத்தில் அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதில் சூர்யா நடிப்பாரா என கேள்வி எழுந்துள்ளது. அதே சமயம் அடுத்தடுத்து படங்களில் நடிப்பதால் இதிலிருந்து சூர்யா நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags : Suriya ,Chennai ,Vetrimaaran ,Vijay Sethupathi ,Soori ,Manju Warrier ,Gautham Menon ,Rajeev Menon ,Bhavani Sri ,Chethan ,
× RELATED திரிஷா படத்திலிருந்து ரஹ்மான் திடீர் விலகல்