×

விஜய் பட டான்ஸ் மாஸ்டரின் புது பாய்ச்சல்

சென்னை: விஜய்யின் தெறி, சிவகார்த்திகேயனின் அமரன் உள்பட பல படங்களுக்கு நடனம் அமைத்தவர் ஷெரிப். இப்போது ஷெரிப் மாஸ்டர் தனது நடன தளமான ஜூபாப் ஹோம் ஆப்பை இன்னுமொரு உயரத்திற்கு கொண்டு செல்ல சுவிட்சர்லாந்தில் நடந்த இசை துள்ளல் 2024 நிகழ்வில் பிரத்தியேகமாக அறிமுகம் செய்தார்.

இதற்கு முன்பு, ஜூபாப் ஹோம் 2024, நவம்பர் 30 அன்று சென்னையில் பிரம்மாண்டமாக அறிமுகமானது. அந்த நிகழ்ச்சியில் கார்த்திக் சுப்புராஜ், ராஜ்குமார் பெரியசாமி ஆகிய இயக்குநர்கள் மற்றும் நடிகர் பாபி சிம்ஹா கலந்து கொண்டு ஜூபாப் ஹோம் தளத்தை வெளியிட்டனர். நடன ஆர்வலர்களை ஊக்குவிக்கும் ஒரு தளத்தை உருவாக்கியதற்காக ஷெரிப் மாஸ்டரின் அர்ப்பணிப்பபையும் மற்றும் அவரின் ஆர்வத்தையும் மூவரும் பாராட்டினர்.

மேலும், சோலோ மூவிஸ் வழங்கிய சுவிட்சர்லாந்து நிகழ்ச்சி நூற்றுக்கணக்கான நடன குழுக்களின் உற்சாகமான நடனங்களுடன் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆப், சோலோ மூவிஸ் வசி, வரதன், மற்றும் பிரபல நடன ஆசிரியர் கௌரி ஆகியோரால் சுவிட்சர்லாந்தில் உள்ள தமிழ் சமூகத்திற்கும் இந்தியர்களுக்கும் பிரத்தியேகமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் நடன OTT தளமான ஜூபாப் ஹோம், இப்போது ஐரோப்பா முழுவதும் கிடைக்கிறது. இந்த ஆப் மூலம் எந்த வயதினரும் நடனம் கற்றுக்கொள்ளலாம். அதற்கான வசதிகள் தரும் பயிற்சி களமாக இது இருப்பதாக ஷெரிப் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

Tags : Vijay ,Chennai ,Sherif ,Vijayin Teri ,Amaran ,SHERIFF ,MUSIC BOUNCE 2024 ,SWITZERLAND ,
× RELATED விஜய் திவாஸ் தினம்: வெற்றிப் போர்...