×

குப்பைகளை தரம் பிரிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

பூந்தமல்லி: திருவேற்காடு நகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் கட்டட கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்றுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. நகர்மன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஆனந்தி ரமேஷ், ஆணையர் ரமேஷ், சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் நகர்மன்ற உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், கட்டுமான துறையை சேர்ந்தவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தூய்மை உறுதிமொழி வாசிக்கப்பட்டது.பின்னர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம்பிரித்து கொடுத்த மக்களை பாராட்டும் விதமாக அவர்களது வீடுகளில் சிறப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. எல்.கே.பி.நகர், பொன்னியம்மன் நகர் குளம்,  வெள்ளாளர் தெரு, பெருமாள் கோவில் தெரு குளம், மாதிராவேடு, வேலப்பன்சாவடி பாலம் ஆகிய இடங்களில் உள்ள நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு, புதர்கள், குப்பைகள் அகற்றப்பட்டன. தொடர்ந்து அப்பகுதியில் மரங்கள் நடப்பட்டன. புதிய முயற்சியாக சிவன்கோவில் தெருவில் நகராட்சி சார்பில் ஸ்டால் அமைக்கப்பட்டு மக்களிடமிருந்து பிளாஸ்டிக்பொருட்கள், பைகள் பெறப்பட்டு அதற்குரிய தொகை வழங்கப்பட்டது. மேலும் மஞ்சப்பை வழங்கப்பட்டது. ராஜாங்குப்பம் பள்ளியில் தூய்மை குறித்து மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. …

The post குப்பைகளை தரம் பிரிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,People's Movement for the Cleanliness of Cities ,Tiruvekkadu ,Dinakaran ,
× RELATED திருவேற்காடு நகராட்சியில் தூய்மை...