×

அல்லு அர்ஜுன் மீது வழக்கு

ஐதராபாத்: தனது ரசிகர்களை ராணுவம் என்று அழைத்ததால் நடிகர் அல்லு அர்ஜுன் மீது ஐதராபாத் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அல்லு அர்ஜுன் அளித்த பேட்டியில், ‘எனது ரசிகர்கள் வெறும் ரசிகர்கள் அல்ல. அவர்களை நான் ராணுவமாக கருதுகிறேன். அவர்கள் எப்போதும் என்னுடன் இருப்பார்கள்’ என்று கூறினர். இந்த நிலையில் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஜவஹர் நகர் காவல் நிலையத்தில் ஸ்ரீநிவாஸ் கவுட் என்பவர் அளித்த புகாரில், ‘அல்லு அர்ஜூன் தனது ரசிகர்களையும், ரசிகர் மன்றத்தையும் ராணுவத்துடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். அவரது பேச்சு ஆட்சேபனைக்குரியது. நாட்டின் ராணுவ பணி என்பது மிகவும் மரியாதைக்குரிய பதவி. அவர்கள்தான் நம்முடைய நாட்டைப் பாதுகாப்பவர்கள். அப்படி இருக்கையில் தனது ரசிகர்களை ராணுவம் என்று அல்லு அர்ஜூன் அழைத்திருக்க கூடாது. ராணுவத்தை அவமதித்த அல்லு அர்ஜூன் மீது வழக்குபதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரியுள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக போலீசார் அல்லு அர்ஜூன் மீது வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Allu Arjun ,Hyderabad ,Mumbai ,
× RELATED இறந்தவர் குடும்பத்தாருக்கு...