×

பராரி விமர்சனம்…

திருவண்ணாமலையைச் சேர்ந்த ராஜாபாளையம் கிராமத்தில், சாதிப் பிரிவினை நிலவுகிறது. அங்கே சாதி பிரச்னையைத் தாண்டி இனவெறியைத் தூண்டும் வெறுப்பு பிரசாரத்தைச் செய்கிறது ஒரு கட்சி. தொழிற்சாலை முதலாளி தமிழ் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருந்தாலும் பிரச்னைகள் ஆரம்பிக்கத் தொடங்குகின்றன. இதற்கிடையே மாற்று சாதியைச் சேர்ந்த தேவகி (சங்கீதா கல்யாண்) மாறனின் மீது காதல் கொள்கிறார்.

இந்த காதல் என்ன ஆனது? இனவெறியிலிருந்து தமிழ் மக்கள் தப்பித்தார்களா? அவர்களுக்குள் இருக்கும் சாதிவெறி மோதல் எங்கே போய் முடிகிறது என்பதையெல்லாம் சொல்கிறது படம். நண்பரின் உதவியுடன் பக்குவமாகப் பிரச்னைகளைக் கையாள்வது, காதலிலிருந்து விலகி நிற்பது என முதிர்ச்சியான நடிப்பைத் தர முயன்றிருக்கிறார் நடிகர் அரிசங்கர். இன்னும் நடிப்பில் கவனம் செலுத்தினால் நன்றாக வருவார். ஹீரோவை விரட்டி விரட்டி காதலிக்கும் நாயகியாகச் சங்கீதா கல்யாண். கிளைமாக்சில் பக்குவமான அதே சமயம் கனமான நடிப்பை தருகிறார்.

சாதி பிரச்னையை எழுப்பும் கேரக்டரில் பிரேம்நாத், இனவெறியை தூண்டிவிடும் புகழ் மகேந்திரன் என இருவரும் வில்லத்தனமான நடிப்பை வேறுவிதமாக தர முயன்றுள்ளனர். ஸ்ரீதரின் ஒளிப்பதிவு கச்சிதம். படத்தொகுப்பாளர் சாம் ஆர்டிஎக்ஸ் சிறப்பாகக் கோத்திருக்கிறார். ஷான் ரோல்டன் இசையில் ‘உன் சாமி என் சாமி வேடியப்பன்’ என்ற பாடல் கவனிக்க வைக்கிறது. பின்னணி இசையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். இயக்குநர் எழில் பெரியவேடி, சமூக அவலத்தை தோலுரித்து காட்ட முயன்றுள்ளார். அதில் பாதி கிணறு தாண்டியிருக்கிறார்.

Tags : Barari ,Rajapalayam ,Tiruvannamalai ,
× RELATED பெண் போலீசிடம் பாலியல் அத்துமீறல் சிறப்பு எஸ்ஐ சஸ்பெண்ட்