×

ஹீரோவுக்கு மனைவியாக நடிக்க மாட்டேன்: மீனாட்சி சவுத்ரி திடீர் முடிவு

சென்னை: இந்தியிலும், தெலுங்கிலும் நடித்துவிட்டு, பிறகு தமிழுக்கு வந்தவர், மீனாட்சி சவுத்ரி. கோலிவுட்டில் வெளியான விஜய் ஆண்டனியின் ‘கொலை’, ஆர்ஜே பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’, விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ ஆகிய படங்களில் நடித்திருந்த அவர், குறுகிய காலத்திலேயே ெதலுங்கில் முன்னணி நடிகையாக மாறி, கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வருகிறார். சமீபத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘லக்கி பாஸ்கர்’ என்ற பான் இந்தியா படத்தின் வெற்றியின் மூலம் ரசிகர் களிடையே மேலும் பிரபலமாகியுள்ள அவர், தற்போது நடிக்கும் படங்களுக்கு புதிய நிபந்தனைகள் விதித்துள்ளார்.

இதுகுறித்து மீனாட்சி சவுத்ரி கூறுகையில், ‘சில படங்களில் நான் ஹீரோவுக்கு மனைவியாக நடித்து இருந்தேன். ‘லக்கி பாஸ்கர்’ படத்தில் துல்கர் சல்மான் மனைவியாக நடித்த எனக்கு பாராட்டுகள் கிடைத்தது என்றாலும், சிலர் என்னிடம் ஏதேதோ சொல்லி பயமுறுத்தி வருகின்றனர். அதாவது, ‘நடிக்க வந்த ஆரம்ப நிலையிலேயே மனைவி போன்ற கேரக்டரில் நடிக்காமல் இருப்பது மிகவும் நல்லது. அப்படி நடிப்பதற்கு இன்னும் சில காலம் இருக்கிறது. அதுவரை ரசிகர்களுக்குப் பிடித்த இளமையான கேரக்டர்களில் நடிக்க வேண்டும்’ என்று சொல்கின்றனர். எனவே, இனிமேல் ஹீரோவுக்கு மனைவியாக நடிக்க வேண்டும் என்று யாராவது கேட்டால், அதில் நடிக்கக்கூடாது என்று முடிவு செய்துள்ளேன். தவிர, அதிரடி ஆக்‌ஷன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறேன்’ என்றார்.

 

Tags : Meenakshi Chowdhury ,Chennai ,Meenakshi Chaudhary ,Vijay Antony ,RJ Balaji ,Vijay ,Kollywood ,
× RELATED சிக்னல் கோளாறு காரணமாக எழும்பூர் வரும் ரயில்கள் தாமதம்..!!