×

மனிதர்களை தரம் பிரிக்கும் நிறங்கள் மூன்று: அதர்வா முரளி

சென்னை: ‘துருவங்கள் பதினாறு’, ‘நரகாசூரன்’, ‘மாஃபியா 1’, ‘மாறன்’ ஆகிய படங்களை தொடர்ந்து கார்த்திக் நரேன் எழுதி இயக்கியுள்ள படம், ‘நிறங்கள் மூன்று’. அதர்வா முரளி, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி, துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் நடித்துள்ளனர். வரும் 22ம் தேதி திரைக்கு வருகிறது. ஐங்கரன் இண்டர்நேஷனல் சார்பில் கருணாமூர்த்தி தயாரித்துள்ளார். டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்ய, ஜேக்ஸ் பிஜாய் இசை அமைத்துள்ளார். இதில் நடித்தது குறித்து அதர்வா கூறியதாவது: உண்மையிலேயே இது வித்தியாசமான படம்.

எந்தவொரு ஜானரிலும் இதை அடக்க முடியாது. சரத்குமார், ரஹ்மான் போன்ற சீனியர் நடிகர்களுடன் பணியாற்றியது குறித்து மகிழ்ச்சி. படம் இயக்க வாய்ப்பு தேடும் இளைஞனாக நான், போலீஸ் அதிகாரியாக சரத்குமார், காலேஜ் புரொபசராக ரஹ்மான் நடித்திருக்கிறோம். ஹைப்பர் லிங்க் பட வரிசையில் ‘நிறங்கள் மூன்று’ புதியதொரு அத்தியாயமாக இருக்கும். இதில் நிறங்கள் என்பது, மனிதர்களின் எண்ணங்களைப் பற்றி குறிப்பிடுகிறது.

Tags : Adarva Murali ,Chennai ,Kartik Narain ,Narakasooran ,Mafia 1 ,Maran ,Sarathkumar ,Rahman ,Ammu Abrami ,Dushyant Jayaprakash ,
× RELATED சிக்னல் கோளாறு காரணமாக எழும்பூர் வரும் ரயில்கள் தாமதம்..!!