×

குஜராத்தில் பெய்து வரும் கனமழையால் தபி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: உக்கை அணை நிரம்பியது

தபி: குஜராத் மாநிலத்தில் தபி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அந்த மாவட்ட மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தபி மாவட்டத்தில் உள்ள  தபி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தபி ஆற்றின் நீர்மட்டம் 9.46 மீட்டராக உயர்ந்துள்ளது. தபி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உக்கை அணை முழு கொள்ளலவை எட்டியதோடு அணைக்கு பலாயிரம் கன அடி அளவில் வெள்ளம் வந்து கொண்டிருக்கிறது. இதனால் உக்கை அணையிலிருந்து வினாடிக்கு 1.99 லட்சம் கன அடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையிலிருந்து தண்ணீர் சீறி பாயும் காட்சி காண்போரை பிரம்மிப்பில் ஆழ்த்துகிறது.உக்கை அணையில் 333 அடி தண்ணீர் மட்டுமே நிரப்பப்பட வேண்டும். ஆனால் தற்போது 333.38 அடுக்கு தண்ணீர் நிரம்பியிருப்பதால் சுமார் 2 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மறுபுறத்தில் வதோதராவில் உள்ள அஜ்வா சரோவர் ஏரியின் நீர்மட்டம் உயர்வதால் அதிலிருந்தும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் விஸ்வாமித்ரா ஆற்றில் வந்து சேறுவதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையில் உள்ள கோட்டைஸ்வரி என்ற கிராமமே வெள்ளத்தில் மிதக்கிறது. ஆற்றின் தண்ணீரில் முதலைகளும் அடித்து வரப்படுவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் தேங்கியுள்ள வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தோல்பூரில் நேற்று இரவு பெய்த கனமழையால் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. அங்குள்ள சந்தை ஒன்றில் மழை நீர் முற்றிலும் சூழப்பட்டிருப்பதால் வியாபாரிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்….

The post குஜராத்தில் பெய்து வரும் கனமழையால் தபி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: உக்கை அணை நிரம்பியது appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Dabi River ,Ukai Dam ,Dabi ,Dabi district ,Dinakaraan ,
× RELATED அப்பாவி உயிர்கள் போன பிறகு செயல்படும்...