×

குவைத் தீவிபத்து; இறந்தோர் குடும்பங்களுக்கு ரூ.5லட்சம் நிதி : பினராயி விஜயன் அறிவிப்பு

கேரளா: குவைத் தீவிபத்தில் இறந்த கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5லட்சம் நிதி வழங்க கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். குவைத் தீ விபத்தில் கேரளாவை சேர்ந்த 19 பேர் இதுவரை உயிரிழந்ததாக அம்மாநில அரசு தகவல் தெரிவித்தது. மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் குவைத் செல்கிறார். இறந்தோர் உடல்களை கேரளா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை வீணா ஜார்ஜ் மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post குவைத் தீவிபத்து; இறந்தோர் குடும்பங்களுக்கு ரூ.5லட்சம் நிதி : பினராயி விஜயன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : KUWAIT FIRE ,PINARAI VIJAYAN ,Kerala ,Chief Minister ,Pinarayi Vijayan ,Kuwaiti Peninsula ,Kuwaiti fire ,Kuwait Divipat ,Binarai Vijayan ,Dinakaran ,
× RELATED குவைத் தீ விபத்து: கேரள அமைச்சரவை ஆலோசனை