×

இயக்குனர் கிரிஷ் ரகசிய திருமணம்

ஐதராபாத்: தமிழில் சிம்பு நடித்த ‘வானம்’ படத்தை இயக்கியவர் கிரிஷ். இவர் ரம்யா என்கிற மருத்துவரை கடந்த 2016ல் திருமணம் செய்து கொண்டார். இரண்டே வருடங்களில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். பின் தற்போது திடீரென ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர் திருமணம் செய்து கொண்டுள்ள பிரீத்தி சல்லா என்பவரும் மருத்துவர்தான்.

ஐதராபாத்தை சேர்ந்த இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தாகி விட்டது. மேலும், 11 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்த மாதம் 16ம் தேதி திருமண வரவேற்பு நடைபெற உள்ளது. இயக்குனர் கிரிஷ் ஜகர்லமுடி தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனர். தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் சில படங்களை இயக்கியுள்ளார். தற்போது, அனுஷ்கா நடித்து வரும் ‘காட்டி’ என்கிற படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Krish ,Hyderabad ,Girish ,Ramya ,
× RELATED ஐதராபாத்தில் புஷ்பா படம் பார்க்க...