×

பிளடி பெக்கரில் கதை கேட்காமல் நடித்தேன்: கவின்

சென்னை: கவின் நடிப்பில் சிவபாலன் முத்துக்குமார் இயக்கியுள்ள படம் ‘பிளடி பெக்கர்’. இயக்குனர் நெல்சன் திலிப்குமார் தனது ஃபிலமென்ட் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையமைத்திருக்கிறார். இத்திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

அதில் பேசிய கவின், ‘இந்த படத்தில் நான் கதையையே கேட்கவில்லை. படத்தின் ஷூட்டிங் உள்ளிட்ட தகவல்களை மட்டுமே கேட்டேன். அந்த அளவிற்கு இயக்குனர் மீது நம்பிக்கை இருந்தது. நெல்சன் திலீப்குமார், சிவபாலன் முத்துக்குமார் உள்ளிட்டவர்களுக்கு இது முதல் முயற்சி என்பதால் இந்த படத்தை மேலும் சிறப்பாக கொடுக்க வேண்டும் என்பதில் தான் தீவிரமாக செயல்பட்டேன். இந்தப் படத்திற்காக நடத்தப்பட்ட லுக் டெஸ்ட் உள்ளிட்டவற்றின் மூலம் படம் குறித்த ஒரு நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது’ என்றார்.

Tags : Gavin ,Chennai ,Sivabalan Muthukumar ,Nelson Dilipkumar ,Filament Pictures ,Jen Martin ,Diwali ,
× RELATED அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டியில்...